Sign in to your account
or
By signing in you agree to our
Terms & conditions
 and 
Privacy policy

Lamivudine இன் பயன்கள்

எச்ஐவி தொற்று மற்றும் நாட்பட்ட ஹெபடைடிஸ் B சிகிச்சைக்காக Lamivudine பயன்படுத்தப்படும்

Lamivudine எப்படி வேலை செய்கிறது

அது வைரஸ் பெருகுவதை தடுப்பதன் மூலம் வேலை செய்கிறது இவ்வாறு தொற்றுள்ள நோயாளியில் அவற்றின்அளவினைக் குறைக்கிறது.

Lamivudine இன் பொதுவான பக்க விளைவுகள்

தலைவலி, குமட்டல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, பலவீனம், இருமல், மூக்கொழுக்கு
Authenticity

Want to Know More

Read Our Editorial Policy

Lamivudine தொடர்பான நிபுணரின் அறிவுரை

  • உங்களுக்கு நீரிழிவு இருந்தாலோ அல்லது இன்சுலின் பயன்படுத்தினாலோ உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • இந்த சிகிச்சையை பெறும் நோயாளிகள் எப்பொழுதுமே தொற்று ஏற்படும் ஆபத்தை கொண்டவர்கள் அதனால் இத்தகைய நிலைகளை மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும்.
  • நீங்கள் பரிந்துரைக்கப்படும் மருந்து ஏதேனும் உட்கொண்டால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்; நீங்கள் HIV அல்லது ஹெப்பாடிட்டீஸ் பி தொற்று சிகிச்சை, ஹேரி செல் லூகேமியா [இரத்த புற்றுநோய் வகை]அல்லது தொற்றுக்கான ஆண்டிபையாட்டிக்ஸ் உட்கொண்டால் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.
  • லாமிவுடைன் லாக்டிக் அசிடோசிஸ் அறிகுறிகளான தசை வலி அல்லது தளர்ச்சி, கைகள் அல்லது கால்களில் மரத்துபோகுதல் அல்லது குளிராக உணர்தல், வயிற்று வலி, குமட்டல், வாந்தி, சுவாசமின்மை, அதிகரித்த இருதய துடிப்பு, மயக்கம், தளர்ச்சி அல்லது தோய்வு உணர்வு போன்றவற்றை அரிதாக விளைவிக்கும் என்பதால்; இந்த அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • இந்த மருந்தை உட்கொள்ளும்போது HIV பரவக்கூடும் சாத்தியம் உள்ளது அதனால் HIV பரவுவதை தவிர்க்க தகுந்த முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது.
  • கொழுப்பு விநியோகத்தில் ஏதேனும் மாற்றம் (லிப்போடிஸ்ட்ரோபி), எலும்பு தேய்தல் (தாடையில் எலும்புத்தசை அழிவு)அல்லது கணைய அழற்சி ( கணைய அழற்சி) போன்றவற்றை கண்டறிந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
  • நீங்கள் சிகிச்சையில் இருக்கும்போது கர்ப்பம் அடைவதை தவிர்க்க கருத்தடை அல்லது ஆணுறையை போன்ற பயனுள்ள ஹார்மோன் அற்ற முறையை பயன்படுத்துவது முக்கியமானது.
  • கணைய அழற்சி பின்னணி அல்லது கணைய அழற்சி-க்கான இதர ஆபத்து கூறுகள் உள்ள குழந்தை நோயாளிகளுக்கு பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவேண்டும்.